பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர்!
SriLanka
Minister of Foreign Affairs
Jayantha Samaraweera
By Chanakyan
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera ) பதவி விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன் புதிய அமைச்சரவை மாற்றமும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்