இலங்கையின் அந்நிய கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் பணவீக்க வீதத்தை 5% ஆகக் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
70% முதல் 6% வரை அதிகரித்துள்ள பணவீக்க வீதத்தை குறைப்பதற்கு இன்று அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய கையிருப்பு
அத்துடன் 2 மில்லியன் டொலராக குறைந்திருந்த அந்நிய கையிருப்பு தற்போது 4.7 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்தந்த பதவிகளில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மாற்று இல்லாத சில பதவிகளுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மத்திய வங்கி
அதன்படி 2022 - 23ஆம் ஆண்டில் 99 மத்திய வங்கி அதிகாரிகள் அல்லது 10% ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தங்களின்படி, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரே மாதிரியான சம்பள உயர்வுக்கு அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் அன்றைய சம்பளத்திற்கான பணம் மத்திய வங்கிக் கணக்கிலிருந்து வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |