வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்தது சிறிலங்கா காவல்துறை
police
arrested
foreigner
By Sumithiran
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய பிரஜை ஒருவரை அஹங்கம காவல்துறையினர் இன்று (02) கைது செய்துள்ளனர்.
ரஷ்ய பிரஜை அஹங்கம பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஹடபலன பிரதேசத்தில் ரஷ்ய பிரஜையின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் இருவரும் காயமடைந்துள்ளதுடன், வெளிநாட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அஹங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி