தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர்
Colombo
Sri Lanka
United States of America
By Shalini Balachandran
கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) பேஸ் ஜம்ப் நிகழ்வில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் வெளிநாட்டவர் தனது பாராசூட்டை திறப்பதில் தாமதம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டவர்
இந்த நிலையில், காயமடைந்த வெளிநாட்டவர் அமெரிக்காவைச் (America) சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவருக்கு உள் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது கால்கள் மற்றும் கைகளில் உணர்வில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி