ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
அத்துடன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க (Mahesh Senanayake) ஐக்கிய படைவீரர் சக்தியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி சேனநாயக்கா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
நியமனம்
இதனையடுத்து இராணுவத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்ற பின்னர், அவர் 2019 ஆகஸ்ட் (20) முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.
பின்னர், சேனநாயக்க 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் (NPP) கீழ் போட்டியிட்டு முக்கிய அரசியல் கட்சிகளின் மூன்று வேட்பாளர்களுக்குப் பிறகு நான்காவது இடத்தைப் பிடித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கும் ( Sarath Fonseka )கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) இடையில் முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |