யாழில் அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது
Sri Lanka Police
The Bank of Ceylon
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று (28.12.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
2 வாரங்கள் முன்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்