பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது சிறை
லிபியத் தலைவர் கேணல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக நிதியாகப் பெற்றதற்காக முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம், செயலற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத பிரசார நிதியுதவி உள்ளிட்ட வழக்கில் உள்ள மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்தது.
வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது
எனினும் இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி குறிப்பிட்டுள்ளார்.
கடாபியிடமிருந்து பெறப்பட்ட நிதியை 2007 தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
கடாபியின் நற்பெயருக்கு எதிராக களங்கம்
அதற்கு ஈடாக, மேற்கில் கடாபியின் நற்பெயருக்கு எதிராக களங்கம் விளைவிப்பதை தெிர்த்து போராட உதவுவதாக சர்கோசி உறுதியளித்ததாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
70 வயதான சர்கோசி 2007 முதல் 2012 வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
