முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
Colombo
SriLanka
Description
Assad Sally
By Chanakyan
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன குறித்து சர்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.