அரச நிலங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் : அரச தரப்பு பகிரங்கம்
காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க நிலங்களை தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் (Aravinda Senarath) தெரிவித்துள்ளார்.
இன்றைய (11.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காணி சீர்திருத்தச் சட்டம்
அத்துடன் 1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் இலக்கம் 1 (Land Reforms Act No. 1 of 1972) இன் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முறையாக அளவிடப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |