தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு
தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கிளிநொச்சி (Kilinochchi) திருநகரில் அமைந்துள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீது இருந்த நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
பலமான கூட்டணி
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை எடுக்காவிட்டால் இவர்கள் ஏனைய கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரும் நிலை ஏற்படலாம்.
அவ்வாறு ஆதரவு கோரும் போது ஊழல்வாதிகள் உள்வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டவர் தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது.
தமிழ் மக்கள் ஒரு பலம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்கு பிரதிநிகளை அனுப்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |