சிறுமி வன்புணர்வு :பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை உறுதி
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளமான சந்தீப் லாமிச்சானே சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 17வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக 23 வயது சந்தீப் லாமிச்சானே மீது வழக்கு பதியப்பட்டது.
சிறைத்தண்டனையும் பிணையும்
விசாரணைக்குப் பிறகு கடந்தாண்டு நவம்பர் 4-ஆம் திகதி காத்மாண்டு நீதிமன்றம் லாமிச்சானேவுக்கு சிறை தண்டனை வழங்கியது. பின்னர் இந்தாண்டின் தொடக்கத்தில் ஜனவரி 12இல் 2 இலட்சம் ரூபாய்க்கு பிராமண பத்திரம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார் லாமிச்சானே.
தண்டனை விபரம் நாளை
பின்னர் நேபாள் நாட்டுக்காக விளையாடியும் வருகிறார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் சந்தீப் லாமிச்சானேவுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டனை விவரம் குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மூத்த தேசிய கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்படுமென தகவலகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |