வீதியோரத்தில் எலுமிச்சை விற்கும் விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர்
Colombo
Kandy
By Vasanth
விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் வீதியோரத்தில் எலுமிச்சை வியாபாரத்தில் ஈடுபடுவதாக சமுக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விஜேரட்ன என்ற முன்னாள் செயலாளரே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவராவார். கொழும்பு - கண்டி வீதியில் கிலோவொன்று ரூபா 150 ஆக இவர் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
தனது மகனின்எலுமிச்சை தோடடத்தில் அறுவடை செய்த எலுமிச்சைகளையே இவர் விற்பனை செய்து வருகிறார். இவர் வீதியோரத்தில் எலுமிச்சை விற்பனை செய்வது தொடர்பில் சமுக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
You may like this