மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!
மட்டக்களப்பு - வாகரை காவல்துறை பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப் துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், இன்று வியாழக்கிழமை (29.01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கைது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று வாகரை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பி.பி.அமில தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் 4 மீட்டதுடன் 32, 48, 28, 42 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர்.

இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி வருபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |