யாழில் போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் கைதுகள்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின் போது கடந்த 3 நாளில் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் போதைமாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் ஆறு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழில் நான்கு சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணியந்தோட்டம் பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        