இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
எதிர்வரும் 15 நாட்களில் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை மறுதினம் (19) மற்றும் ஜூன் 1 ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை (18) மற்றும் ஜூன் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை 5 எரிபொருள் தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று கச்சா எண்ணையை கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு கடந்த 8 நாட்களாக டொலரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.