பில்லியன் டொலர்கள் சட்டவிரோத பரிமாற்றம்! கைதான வங்கி மேலாளர்களுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
வெளிநாடுகளுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, நான்கு முக்கிய தனியார் வங்கிகளின் நான்கு மேலாளர்களை, ஓகஸ்ட் 20-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |