நான்கு வழிகளில் மாகாண சபைத் தேர்தல் : சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Jaso
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முறைகள் குறித்த கருத்துக்களைக் கொண்ட அறிக்கை, இவ்விஷயத்தை ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நான்கு வழிகளில் நடத்தலாம் என்று குழுவின் முன் தெரிவிக்கப்பட்டுள்ளது என அக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க கூறினார்.
நான்கு வழிகளில் தேர்தல்
முந்தைய மாகாண சபைத் தேர்தல் முறை, பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய தேர்தல் முறை, எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் காரணமாக நாடாளுமன்றத்தில் முடக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் முறை, மற்றும் புதிய எல்லை நிர்ணய அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முறை ஆகியன மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நான்கு சாத்தியமான வழிகளாகும்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்