யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Kajinthan
யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த (23) ஆம் திகதி சுவாசிப்பதற்கு சிரமப்பட்டது.
மரண விசாரணை
இந்நிலையில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி