பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் : மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி
பலஸ்தீன (Palestine) அரசை பிரான்ஸ் (France) அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ள கருத்திற்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால், மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இஸ்ரேல் அரசை அங்கீகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி
இந்தியா உட்பட சுமார் 150 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முதன்மையான மேற்கத்திய நாடுகள் இதுவரை பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
அதேவேளை, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலையும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அது பயங்கரவாதத்திற்கான வெகுமதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பதிலடி
மேலும், கற்பனையான ஒரு பலஸ்தீன நாட்டை எந்த ஒரு நாடும் ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது, நாம் அனைவரும் அறிந்த யதார்த்தத்தில், பயங்கரவாதத்திற்கான பரிசாகவும், ஹமாஸ் படைகளுக்கு ஒரு ஊக்கமாகவும் இருக்கும் என அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருபோதும் கொண்டு வராது என குறிப்பிட்டுள்ள அவர், நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
