பிரான்சில் நடந்த பயங்கரம்... இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவன்!
பிரான்சில் மாணவன் ஒருவர் சுத்தியலால் அடித்ததால், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ள நிலையில், அந்த மாணவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரான்சின் செயிண்ட்-மைக்கேல்-சுர்- ஒர்கேலில் இருக்கும் லியோனார்ட்-டி-வின்சி லிசேயின் வாயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குழு மோதலில், 15 வயதுடைய சிறுவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, தலை பிளந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர், செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், இன்னும் சிறுவன் ஆபத்தான நிலையை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மாணவனின் தந்தை, பொலிசாரும், அரசாங்கமும் இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த 21-ஆம் நூற்றாண்டில், பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,