காவல்துறை அதிகாரியின் மோசடி அம்பலம்
காவல் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த பரிசுப் பணத்தை மோசடியான முறையில் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்த காவல்துறை அதிகாரியான சார்ஜன்ட் ஒருவரை காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காலி காவல்துறை பிரிவில் கடமையாற்றும் இந்த சார்ஜன்ட் காவல்துறை உத்தியோகத்தரின் நிதிப் பொறுப்பதிகாரி ஆவார்.
சொந்த வங்கி கணக்கிற்கு
காவல்துறை தலைமையகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஏழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபா பெறுமதியான காணிக்கை பணத்தை அவர் தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

அன்பளிப்புப் பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்திய போது, அவர் இந்த மோசடி செய்தது தெரியவந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நீதிமன்றில் காவல்துறை அதிகாரியின் சந்தேகமான செயற்பாடு
இதேவேளை, கெக்கிராவ நீதிமன்ற வளாகத்தில் தனது காவல்துறை அடையாள அட்டையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டமைக்காக சேவை தடை செய்யப்பட்ட கெக்கிராவ காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கெக்கிராவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி!