யாழில் வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி செய்தவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Law and Order
By Dilakshan
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது, யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கே விடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.
அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையனிர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி