காணியற்ற மக்களுக்கு இலவச பத்திரம்: ஐந்தே மாதங்களுக்குள் தீர்வு
சுமார் பத்து இலட்சம் காணியற்ற மக்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலவசப் பத்திரங்கள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனை கூறியுள்ளார்.
அத்தோடு, மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் அலட்சியம் காட்டும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வாக்குறுதி
அதேவேளை, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஒடுக்கும் முயற்சி அரசாங்கத்திடம் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |