சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் போரை முடித்துவிடலாம் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், ஈரான் குறைந்தது ஆறு மாத கால போருக்குத் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
"எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நாங்கள் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. தேவைப்படும் வரையிலும், அவசியமான எந்த வழியிலும் எங்கள் நாட்டையும் எங்கள் மக்களையும் நாங்கள் பாதுகாப்போம்," என்று அவர் கூறியுள்ளார்.
போரின் முடிவு
மேலும் கருத்து வெளியிட்ட அராக்சி, "எங்கள் எதிரிகள் தங்களுக்கு என்ன காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டாலும் அது ஒரு பொருட்டல்ல.
Image Credit: Britannica
சேதங்களைச் சந்திப்பதற்கு முன்பு, அவர்கள் இந்தப் போரை முழுமையாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை," எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, போரின் முடிவானது பிராந்தியம் முழுவதும் அமைதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேரடிப் பேச்சுவார்த்தை
இதேவேளை, ஈரானில் ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ட்ரம்ப் கூறிவந்த போதிலும், தெஹ்ரான் வொஷிங்டனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று அராக்சி தெரிவித்துள்ளார்.

அதன்போது, "பேச்சுவார்த்தை என்பது இரண்டு நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகும், எங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அப்படி ஒன்று இல்லை," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் இருந்து தனக்குச் செய்திகள் வந்துள்ளதாகவும், அமெரிக்காவும் ஈரானும் இடைத்தரகர்கள் மூலம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அராக்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்