பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை - வெளியான தகவல்
Education
School Incident
schools
By Thulsi
நாட்டிலுள்ள 4,640,086 பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுசரணை பெறும் 10,096 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களுக்கு இவ்வருடத்திற்கான பாடசாலை சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணிகள் வழங்க 12 மில்லியன் மீற்றர் துணி தேவைப்பட்டது.
சீன அரசாங்கத்தின் உதவி
இவ்வருடத்திற்கான (2025) மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையையும் சீனா மானியமாக வழங்க உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அந்தவகையில், சீன அரசாங்கத்தின் உதவியின் சீருடை துணிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றன.
அனைத்து பாடசாலைகளுக்கும் இலவச சீருடை துணிகளை வழங்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்