இலங்கைக்கு வந்து குவியப்பேகும் வெளிநாட்டவர்கள் : வழங்கப்படவுள்ள இலவச விசா
இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்தார்.
இவ்வாறு மேலும் சில நாடுகளுக்கு விசா வசதியை வழங்குவதன் மூலம், இலவச விசா வசதிகள் வழங்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 40க்கும் மேல் அதிகரிக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
39 நாடுகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் விசா
"தற்போது, நாங்கள் 39 நாடுகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் விசா வசதிகளை வழங்குகிறோம்." free visa Charge வசதியை வழங்கும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் சில நாடுகளையும் சேர்க்க யோசனை உள்ளது. அதற்கான வர்த்தமானி தயாரிக்கப்பட்ட பிறகு, இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் முடிந்ததும் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
அதிக சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு
"அப்போது, 40க்கும் மேற்பட்ட நாடுகள் free visa Charge வசதியின் கீழ் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளைப் பெறும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்