போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த சொத்துக்கள் : காவல்துறை எடுத்த முடிவு
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
விசாரணையின் போது, சந்தேக நபர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தில் சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு உழவு இயந்திரத்தை வாங்கியதும், 10 மில்லியன் ரூபாயை (10,000,000/=) ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நேற்று (24) முதல் 07 நாட்களுக்குக் குறிப்பிட்ட சொத்துக்களை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |