புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான விசேட அறிவித்தல்
Sri Lanka
By Beulah
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அறிவித்தல் ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மொழிகள்

அத்துடன், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி