ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடமிருந்து பறிபோனது கூட்டமைப்பு வசமானது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வசமிருந்த மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமானது. மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தெரிவு இன்று சபையின் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. 31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் பதவி வகித்திருந்தார்.
அதன்போது இரண்டு தடவைகள் இடம்பெற்ற சபையின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால், தவிசாளர் வெற்றிடம் காணப்பட்ட செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றது. இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னத்துரை சரவானந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய தவிசாளர் தெரிவின் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கு.கிரிதரன் ஆகியோர் சபைக்குள் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்காக திறந்த வாக்கெடுப்பிற்கு விடுவதா? அல்லது இரகசிய வாக்கெடுப்பிற்கு விடுவதா? என்பது குறித்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது. இதற்கு ஆதரவாக 30 பேரும் திறந்தவெளி வாக்கெடுப்பிற்குவிடுமாறு கோரியிருந்தனர்.
31 உறுபினர்களுடைய இன்றைய சபை அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டிருக்கவில்லை. இதன் பின் திறந்த வாக்கெடுப்பானது ஆரம்பமானது. வாக்கெடுப்பிற்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் வ.சந்திரவர்மன்(த.தே.கூ) முன்மொழிய அதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிதேசசபை உறுப்பினர் சி.சிவானந்தன்(த.தே.கூ) வழிமொழிந்தார்.
இதே வேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட ந.திருநாவுக்கரசு நா.மோகராஜ்(த.ம.வி.பு) முன்மொழிய, அதை உறுபினர் க.லோகிதராஜா(த.ம.வி.பு) வழிமொழிந்தார். இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ந.திருநாவுக்கரசு என்போருக்கான தவிசாளர் தெரிவுப் போட்டி இடம்பெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போட்டியாளர் சி.சர்வானந்தனுக்கு ஆதராவாக த.தே.கூ, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,ஐ.தே.க, தமிழ்ர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போட்டியாளர் ந.திருநாவுக்கரசுவுக்கு ஆதரவாக த.ம.வி.பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சார்பாக 11 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் ஜனநாயக தேசிய இயக்கம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆகிய இருவரும் இதற்கு நடுநிலையாக வாக்களித்தனர். இதேவேளை ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளராக 06 மேலதிக வாக்குகளால் சி.சிவாணந்தன்(த.தே.கூ) தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் பிரதே சபைக்கு வருகை தந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன் இவர்களுடன் வடகிழக்கு இளைஞர் அணித்தவைர் கி.சேயோன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் வருகைதந்து தவிசாளருக்கு வாழ்துக்கள் தெரிவித்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.












ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
