எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Vanan
எரிபொருள் ஒதுக்கீடு இம்மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
இது தொடர்பாக குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவிக்கையில்,
கியூ.ஆர். முறைமை

முன்னதாக ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும், நாட்டில் சீராக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்களால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அடுத்தமாதம் முதல் கியூ.ஆர். முறைமையை நீக்குவது குறித்து ஆராயப்படுகிறது. எனினும் அது குறித்த முடிவு எதனையும் இன்னும் எடுக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.