எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் வழங்குவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயற்படுத்தப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
வரிசைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், மக்கள் மத்தியில் பீதி கலந்த கொள்வனவைத் தடுப்பதற்கும் இந்த முறைமை உதவியாக உள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கியூ.ஆர் முறைமையைத் தொடர்வதாகவும் எதிர்காலத்தில் எரிபொருள் கோட்டாக்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எரிபொருள் ஒதுக்கீடு
அந்தவகையில் ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடானது கார் - 25 லீற்றர், முச்சக்கர வண்டி - 20 லீற்றர், வான் - 50 லீற்றர், மோட்டார் சைக்கிள் - 8 லீற்றர், பேருந்து - 100 லீற்றர், லொரி - 200 லீற்றர் என இவ்வாறு அமைந்துள்ளது.

இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகளை முறையாகச் சரிபார்க்காமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |