மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு..! நீளும் வரிசைகள்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
Petrol diesel price
By Kanna
முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை என்பதால் முத்துராஜவெல முனையம் மூடப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் வரிசை யுகம்
அத்துடன், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருகின்றனர்.
இதேவேளை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் 500 எரிபொருள் தொகுதிகளில் பாதிக்கு குறைவானவையே நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்