விநியோகத்தை மட்டுப்படுத்தியது லங்கா ஐஓசி! வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
Petrol diesel price
By Kanna
தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 1,500 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 2,500 ரூபாவாகும், மோட்டார் வாகனங்களுக்கு 7,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, அனைவருக்கும் எரிபொருள் விநியோகம்! அதிரடி அறிவிப்பு வெளியானது
