எரிபொருள் விநியோகம் -பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Jaso
எரிபொருள் விநியோகம்
வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் கட்டாயம்
எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த முறை ஆரம்பிக்கப்படும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.