நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தை வந்தடைந்த எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருட்கள் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பலூடாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருட்கள் நிரப்பிய பவுசர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நேற்றைய தினம் (25) புதன்கிழமை நெடுந்தீவிற்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய டீசல், மண்ணெண்ணெய், பெட்ரோல் என்பன நெடுந்தீவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருட்கள்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில் நெடுந்தீவு பல நோ.கூ.சங்க வளாகத்தில் அரசநிதி ஊடாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டு ஒப்பந்தகாரரால் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 13,200 லீற்றர் டீசல், 19,800 லீற்றர் மண்ணெண்ணெய், 6600 லீற்றர் பெட்ரோல் என்ற அளவுகளில் எரிபொருட்கள் கொண்டுவரப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளன.
கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் குறித்த எரிபொருட்கள் நிரப்பிய இரு பவுசர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து ஏற்றப்பட்டு நெடுந்தீவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |