நெருக்கடியான தருணத்தில் இந்தியா ஆதரவு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of India
By Vanan
இந்தியாவில் இருந்து இன்று 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இதுவரை 440,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையிலான எரிபொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் அதிக எரிபொருட்கள் வழங்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி