எரிபொருள் இறக்குமதியில் கலப்படம் - அம்பலமானது தகவல்
mixed
fuel
import
Wasantha Samarasinghe
By Sumithiran
தற்போது இலங்கைக்கு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
சில காலமாக இலங்கைக்கு 92 ஒக்டேன் பெற்றோல் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்போது 91 ஒக்டேன் பெற்றோல் மாத்திரமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகை பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தரமற்று உள்ளதாகவும் இதனால் வாகனங்கள் பழுதடைவதாகவும் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியவில்லை எனவும் தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி