எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் இறுதி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்படும் நிலையில் இந்த முறை சற்று தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலை சற்று குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம்
இதேவேளை, அமெரிக்கா - ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு, ஈரான் - அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றம் ஒரு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |