தையிட்டி விகாராதிபதியின் நோக்கம் இதுதான் : அம்பலப்படுத்திய நயினாதீவு விகாராதிபதி
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை மட்டுமன்றி அதனை சூழவுள்ள முழுக்காணியையும் கைப்பற்றுவதே தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதியின் நோக்கம் என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக விகாராதிபதியுடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்தித்து நடவடிக்கை எடுப்பது என அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிலையிலே நயினாதீவு விகாராதிபதி இதனைச் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை நிகழ்த்தி முழுமையாக காணியை விடுவிப்பதற்கு முயற்சியுங்கள். ஒருவேளை விடுவிக்கப்படாவிட்டால் தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள அளவான காணியை என்னுடைய நிர்வாகத்திற்கு கீழே தந்தால் அதன்பின்னர் என்னுடைய பெயரில் இருக்கும் பழைய திஸ்ஸ விகாரையின் காணியை தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளருக்கு வழங்குவேன்.
தையிட்டியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன். நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் தென்னிலங்கையில் இருப்பவர்கள் குழப்பமடைவார்கள்.
ஜனாதிபதிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எந்த ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தாலும் என்னை வந்து சந்திப்பார்கள் ஆனால் இந்த ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு ஐந்து தடவை வந்தபோதும் என்னை சந்திக்க வரவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |