எரிபொருள் விலை திருத்தம்: அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட யோசனை
அரசாங்கம் விலைச்சூத்திரத்தின் படி செயற்பட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் எரிபொருட்களின் விலை எவ்வாறு குறையும் என்பது தொடர்பில் முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) கருத்து வெளியிட்டுள்ளார்.
மாத்தறை (Matara) பிரதேசத்தில் நேற்று (18.10.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விலைச்சூத்திரத்தின்படி அரசாங்கம் செயற்படும் பட்சத்தில், டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிச்சயமாக 15 முதல் 20 ரூபா வரை குறையும் என முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை திருத்தம்
அத்தோடு, தாம் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்கு பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியிலிருந்து கூறிய அனைத்தும் பொய்யானது என்பதை கடந்த எரிபொருள் விலை திருத்தம் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது எரிபொருள் பணம் தனது சட்டைப் பைக்குள் சென்றிருந்தால், தற்போது அந்தப் பணம் பொறுப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்கவின் சட்டைப் பைக்குள் செல்ல வேண்டும் எனவும் கஞ்சன விமர்சித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை
இந்த நிலையில், நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய குழுக்களால் விமர்சிக்கப்பட்ட விடயங்களில் உண்மையும் பொய்யும் தற்போது மக்களுக்கு தெரியவரும் என முன்னாள் அமைச்சர் கஞ்சன வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விற்பனை தொடர்பான உண்மையைப் புரிந்து கொண்டதற்காக அரசாங்கத்திற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |