எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் எரிபொருள் விலை மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும்.
எனினும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தற்போதைய அரசாங்கம் இதுவரை எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உள்ள இரண்டாவது எரிபொருள் விலைத் திருத்தம் இதுவாகும். முதல் திருத்தமாக கடந்த மாதம் எரிபொருள் விலை ஓரளவு குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலை
அந்தவகையில், மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் கடந்த மாதம் (30) ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன் புதிய விலை 311 ரூபாவாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
இத்தகைய பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலை நுகர்வோர்களால் உணரப்படும் எண்ணிக்கையில் குறைக்கப்படும் என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |