சிறிலங்கா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக மனுத்தாக்கல்!
சிறிலங்கா மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தமக்கு எதிராக இலஞ்சம் பெற முயன்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரின் விளக்கம்
எரிபொருள் சுத்திகரிப்பு செயல்பாடு தொடர்பான உரிமத்தைப் புதுப்பிக்கும் கோரிக்கையொன்றை தாம் 6 புள்ளிகளை குறிப்பிட்டு நிராகரித்ததாக மனுதாரரான சுபுன் எஸ் பத்திரகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினரிடம் இருந்து தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைனை தொடர்ந்து, இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில், தாம் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கோரிக்கை
இந்த பின்னணியில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்குமாறு சுபுன் எஸ் பத்திரகே உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்