அரச அனுசரணையுடன் பிரியந்தவுக்கு இறுதிக் கிரியை
funeral
priyantha kumara
kanemulla
By Vanan
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரான, பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 8ஆம் திகதி அரச அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இவரது (அஸ்தி அடங்கிய) சடலம் இன்று மாலை 5 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட அன்னாரது சடலம், கனேமுல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 8ஆம் திகதி அரச அனுசரணையுடன் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்