மேலும் 772 பேருக்கு புதிதாக தொற்று
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 772 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 523,550 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 31, 560 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 435 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 478,761 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று வெளிவந்த அறிக்கையின் படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 44 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,229 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.