“சிறிலங்காவின் அடுத்த அதிபர் நானே” : ஜனக்க ரத்நாயக்க அறிவிப்பு!
சிறிலங்காவின் அடுத்த அதிபராக தாம் நியமிக்கப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராக தாம் தெரிவு செய்யப்படுவதாக ஊடகவியளாலர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தாம் களமிறங்குவது தொடர்பில் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனக்க ரத்நாயக்கவின் திட்டம்
இலங்கையின் பொருளாதாரத்தை சீரான பாதையில் கொண்டு செல்லக்கூடடிய திட்டங்கள் தம்மிடம் இருப்பதாக ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அதிக வருமானத்தை ஈட்ட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் கண்டிப்பாக போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
மின் தடை
இலங்கையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்டதை போன்ற மின்சார தடை நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான திட்டமொன்றை கடந்த 2022 ஆம் ஆண்டு தாம் சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைத்திருந்ததாக ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அதனை பொருட்படுத்தவில்லை எனவும், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாகவும், மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |