நாட்டை மீண்டும் கடனாளியாக்கும் இலங்கையின் அரசியல் கொள்கைகள்
இலங்கை (Sri Lanka) ஏனைய நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் தொடர்ந்தும் ஏற்படலாமென கொழும்பு (Colombo) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் (Amirthalingam) தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி என்பது வெறுமனே துறைமுகத்தை கட்டுவது மற்றும் விமான நிலையத்தை கட்டுவது மட்டுமல்ல அனைத்து விடயங்களிலுமான இலங்கையின் மாற்றம் அதை நோக்கி செல்லாவிட்டால் இலங்கை ஏனைய நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு மீண்டும் தள்ளப்படலாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான கொள்கை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ஜனாதிபதியாக வர இருப்பவர் நாட்டினுடைய அனைத்து விதமான பிரச்சினைகளையும் அறித்திருக்க வேண்டும்.
அத்தோடு, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையை முன்னேற்றுவது குறித்த பூரண மற்றும் அடிப்படை அறிவை அவர் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தேர்தலில் வெற்றி பெறுவது எவ்வாறு என்று மட்டும் சிந்தித்து கொண்டிருந்தால் ஆட்சி மாறுவது குறித்து கொள்கைகளும் மாற்றமடைவதால் இலங்கையால் ஒரு தொடர்ச்சியான கொள்கையை கடைபிடிக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |