புறக்கணிக்கப்படும் அடைக்கலநாதன்: கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (Tamil National Alliance) நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவிக்குச் செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) பெயரை, பரிந்துரைத்த யோசனையைச் சிலர் அலட்சியம் செய்வதாகத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Tamil Eelam Liberation Organization) பொதுச் செயலாளர் கோவிந்தன் கருணாகரம் (G. Karunakaran ) குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் செயற்பாடு
எனினும், கட்சியின் செயற்பாடுகளுக்கும், நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவதே தமது நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |