ஜி. எஸ். பி வரிச்சலுகையை தக்க வைக்க அரசில் ஏற்பட்டுள்ள மனமாற்றம்
srilanka
dinesh gunawardana
g s p
By Sumithiran
அரசின் செயற்பாடுகளால் ஜி எஸ். பி வரிச்சலுகையை அரசாங்கம் இழக்கவுள்ளதாக அபாய எச்சரிக்கையை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் தக்கவைக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைக்க அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலுக்கமைய, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு வரும்படி அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற அரசாங்கம் விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி