ஆட்சிக்காக மட்டும் அரசியல் செய்யும் தேவை எங்களுக்கு இல்லை: கஜேந்திரகுமார் சீற்றம்
கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தால் மாத்திரமே நாங்கள் தமிழரசுக்கட்சிக்கு எப்போதும் ஆட்சியமைக்க கைகொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சி பிடிப்பதற்காக அரசியல் செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
நாங்கள் இருப்பது ஒரு கொள்கையின் அடிப்படையில், இதன் பொருட்டுதான் தமிழ் தேசியத்திற்கு ஆணையை வழங்குங்கள் என நாங்கள் மக்களிடம் கோரினோம்.
இதன்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வருமாறு அழைத்த போது அவர்கள் ஒத்துழைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் அரசியல் தரப்பு, தமிழரசுக் கட்சியின் அரசியல் நகர்வு, செம்மணி விவகாரம் மற்றும் தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தலைமைகளின் தற்போதைய அரசியல் தலையீடு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய சக்ரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
