ஐ.நாவின் சுயநிர்ணய உரிமை பெயரளவிலா? கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி

srilanka gajendrakumarponnambalam
By Vasanth Mar 22, 2021 07:05 AM GMT
Report

சுயநிர்ணய உரிமையை ஐ.நா பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்டம் வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ் தேசமானது தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக போராடிவருகிறது. இலங்கை அரசானது வன்முறையை கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மை பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழி போராட்டத்தை எடுக்க நேர்ந்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச் சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 சதவீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத்தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஆகக் குறைந்தது இந்த அரசின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகும் எனவே எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே.

இந்த அரசானது, சர்வதேசத்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.

ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை பெயரளவில் மட்டும் கருதியிருக்கும் வரை, சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என மேலும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி